< Back
மாநில செய்திகள்
திருச்சி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் பேருந்து - 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
மாநில செய்திகள்

திருச்சி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் பேருந்து - 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

தினத்தந்தி
|
1 Jan 2023 5:37 PM IST

புகை பரவிய ஆரம்பித்த உடன், அதன் உள்ளே இருந்த 30 பயணிகளும் இறக்கி விடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து தம்பம்பட்டிக்கு சென்ற தனியார் பேருந்து நாகநல்லூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரிந்தது. பேருந்தில் புகை பரவிய ஆரம்பித்த உடன், அதன் உள்ளே இருந்த 30 பயணிகளும் இறக்கி விடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இது தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்து தீயணைப்புத்துறையினர், போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் அதற்குள் பேருந்து முழுவதுமாக சேதமடைந்தது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்