< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சிதம்பரத்தில் தனியார் பேருந்து பஸ் கண்ணாடி உடைப்பு, போலீசார் விசாரணை
|11 March 2023 6:46 PM IST
சிதம்பரத்தில் பா.ம.க சேர்ந்த 25 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்,
கடலூரில் என்.எல்.சி நிறுவனத்தின் நில எடுப்பை கண்டித்து பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டத்தை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் நான்கு முக்கிய வீதிகளில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமக கட்சியை சேர்ந்த சிதம்பரம், நான்கு முக்கிய வீதிகள், முட்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 25 பேரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கைது செய்து அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர். தொடர்ந்து சிதம்பரம் பஸ் நிலையத்தில் தனியார் பேருந்தை பின்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் அடித்து உடைத்தனர். இதுகுறித்து போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.