சென்னை தலைமைச்செயலகம் அருகே தனியார் பஸ் விபத்து: ஓட்டுனருக்கு காயம்
|சென்னை தலைமைச் செயலகம் அருகே தனியார் நிறுவன ஊழியர்களை அழைத்து சென்ற பஸ் விபத்துகுள்ளாகியுள்ளது.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகம் அருகே தனியார் நிறுவன ஊழியர்களை அழைத்து சென்ற பஸ் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. ஆபிஸர் மெய்ஸ் நுழை வாயில் அருகே இருக்கும் 1500 கிலோ எடையுள்ள கல்லை தூக்கி எரிந்துள்ளது. பஸ்சின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது.
வேளச்சேரியில் இருந்து 13 பேரை ஏற்றிக்கொண்டு எண்ணூரில் உள்ள எல் அன்ட் டி நிறுவனத்திற்கு கொண்டு செல்லும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள் வழக்கு பதிவு செய்து ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்தாரா அல்லது மது அருந்தி விட்டு இயக்கினாரா எனவும் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
காலை 6.30 மணியவில் இந்த விபத்து நடந்துள்ளது. சாலை ஓரமாக யாரும் நடந்து செல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. காயமடைந்த ஓட்டுநர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பஸ் வேளச்சேரியில் இருந்து எண்ணூருக்கு, ஊழியர்களை அழைத்துச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், பஸ்சில் பயணித்த 13 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.