< Back
மாநில செய்திகள்

கோப்புப்படம்
மாநில செய்திகள்
புழல் சிறையில் டியூப் லைட்டுகளை உடைத்து ரகளையில் ஈடுபட்ட சிறைக் கைதிகள்

18 May 2024 11:26 PM IST
புழல் சிறையில் டியூப் லைட்டுகளை உடைத்து ரகளையில் ஈடுபட்ட 8 சிறைக் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் நெப்போலியன், ரவிச்சந்திரன் உள்பட 8 பேர் சிறையில் உள்ள டியூப் லைட்டுகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும், நெப்போலியன், ரவிச்சந்திரன் இருவரும் உடைந்த டியூப் லைட்டுகளை தங்களது உடலில் கீறி கொண்டனர். இதனால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர்களை காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்து மீண்டும் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 சிறை கைதிகள் மீதும் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.