மதுரை
பாலியல் வழக்கு கைதி தப்பிச்செல்லும் வீடியோ காட்சி
|பாலியல் வழக்கு கைதி தப்பிச்செல்லும் வீடியோ காட்சி வெளியானது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் பத்மேஸ்வரன் (வயது 23). கடந்த மார்ச் மாதம் மூக்கையூர் கடற்கரையில் காதலனுடன் வந்த மாணவியை, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பத்மேஸ்வரன் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த வழக்கில் பத்மேஸ்வரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவரை பிடிக்க முயன்ற போது விழுந்ததில் அவரது 2 கால்களிலும் முறிவு ஏற்பட்டது. மதுரை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவருக்கு, அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கடந்த 18-ந்தேதி பத்மேஸ்வரன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தபோது அங்கிருந்து நைசாக தப்பிச் சென்றார். அவரை பிடிக்க தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் பத்மேஸ்வரன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச்செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர், ஆஸ்பத்திரி வாசலில் ஒரு ஆட்டோவை நிறுத்தி, அதில் ஏறி செல்வது போன்றும்,. கோரிப்பாளையம் வரை ஆட்டோவில் சென்ற பத்மேஸ்வரன், அங்கிருந்து நண்பர்களின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாகவும் கூறப்படுகிறது. மதுரையில் அவருக்கு நெருங்கிய உறவினர்கள் உள்ளனர். அவர்களின் வீட்டில் பத்மேஸ்வரன் பதுங்கி உள்ளாரா? அல்லது வெளியூருக்கு சென்றாரா? என்பது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.