< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை - அமைச்சர் தங்கம் தென்னரசு
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை - அமைச்சர் தங்கம் தென்னரசு

தினத்தந்தி
|
25 Nov 2022 6:12 PM IST

தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சென்னை,

கிருஷ்ணகிரி மாவட்டம் கூத்தனப்பாலை டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைக்காக வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்படுவதாக கூறப்பட்டது. இதற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டம் தெரிவித்து.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் தமிழகத்தை சார்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ஜி.ஏம்.ஆர் தொழிற்பூங்காவில் 500 ஏக்கர் பரப்பில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நிறுவப்பட்டு வருகிறது. தங்கள் நிறுவனத்தில் 80 சதவீத பணியிடங்களுக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை நியமிக்க நிறுவனம் உறுதியளித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்