< Back
மாநில செய்திகள்
பிரதமர் வருகை: திருச்சி மாநகரில் 6 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை
மாநில செய்திகள்

பிரதமர் வருகை: திருச்சி மாநகரில் 6 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை

தினத்தந்தி
|
29 Dec 2023 9:54 AM IST

இந்த உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிற 2-ந்தேதி காலை 10 மணிக்கு திருச்சிக்கு விமானத்தில் வருகிறார். பின்னர் நிகழ்ச்சிகள் முடிந்து பகல் 1.05 மணிக்கு லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி திருச்சி மாநகர எல்லைக்குள் வருகிற 2-ந்தேதி வரை 6 நாட்களுக்கு டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தடை விதித்துள்ளார். இந்த உத்தரவை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்