திருப்பத்தூர்
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட விழிப்புணர்வு முகாம்
|ஆம்பூரில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருப்பத்தூர் சர்வோதய சங்கம், காதி கிராமோத்யோக் பவன், கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட விழிப்புணர்வு முகாம் ஆம்பூரில் நடைபெற்றது.
சென்னை கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் மாநில இயக்குனர் பி.என்.சுரேஷ் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் சையத்கலீமுல்லா வரவேற்றார்.
திருப்பத்தூர் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் வி.சி.ரவி, வேலூர் மாவட்ட கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரிய உதவி இயக்குனர் சி.சிவக்குமார், நாட்டறம்பள்ளி இந்தியன் வங்கி கிளை மேலாளர் கே..ராஜன் ஆகியோர் தொழில் முனைவோர்கள் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் பற்றி விளக்கி பேசினார்கள்.
முகாமில் சிறு,குறு தொழில்கள் தொடங்க என்ன தகுதி, கடன் வசதி, அரசு மானியம், பயிற்சிகள், குறித்து வீடியோ பதிவுகளை காண்பித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
முடிவில் திருப்பத்தூர் சர்வோதய சங்க செயலாளர் சி.லோகேஸ்வரன் நன்றி கூறினார்.