< Back
மாநில செய்திகள்
பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் விழா
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் விழா

தினத்தந்தி
|
18 Sept 2023 10:52 PM IST

திருக்கோவிலூர் பா.ஜ.க. வடக்கு ஒன்றியத்தில் பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் விழா நடைபெற்றது.

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் பா.ஜ.க. கிளை சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி வடக்கு ஒன்றிய தலைவர் கொட்டாம்பேடு அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. அம்மன்கொல்லைமேடு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றியத்தலைவர் தலைமையில் கிளை தலைவர் வெற்றிச்செல்வன் கொடியேற்றி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதைத் தொடர்ந்து சோழபாண்டியபுரம் கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கட்சியின் பொதுச்செயலாளர்கள் பழனிவேல், ராமலிங்கம், பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியதுடன் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதில் மாவட்ட துணை தலைவர் சரவணன், செயலாளர் ராதிகாகாந்தச்செல்வன், அரசு தொடர்பு பிரிவு செயலாளர் கொளஞ்சியப்பன், நிர்வாகிகள், பழனிவேல், நாராயணன், கபிலன், வெங்கடேசன், ஆறுமுகம், நாராயணன், ஏழுமலை, தர்மா, சுந்தர், ரஞ்சித், கிளை தலைவர் பழனிவேல், ஒன்றிய துணை தலைவர் வெங்கடேசன், ஓ.பி.சி. அணி ஒன்றிய தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்