ராணிப்பேட்டை
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா
|ஆற்காடு கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிழக்கு ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி கிராமத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு ஒன்றிய பொருளாளர் வி.விஜய் லோகேஷ் தலைமை தாங்கினார்.
ஒன்றிய தலைவர் எல்.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் சி.விஜயன், மாவட்ட செயலாளர் ஏ.எம்.வரதன், மாவட்ட பொது செயலாளர் பி.பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு, ஏழை எளியவர்களுக்கு அரிசி, போர்வை, மரக்கன்றுகளை வழங்கினர்.
மேலும் பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு மருத்துவ உதவியாக ரூ.10 ஆயிரம், அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வளவனூர், லாடவரம், மாங்காடு ஆகிய இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பார்த்திபன், மாவட்ட பொருளாளர் மின்னல் பிரசாத், மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்.ஜெயலலிதா, என்.ஜெயச்சந்திரன், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் சம்பத், செயலாளர் இ.பா.ஹரிராமகிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி தலைவர் எம்.அமரேசன், ஒன்றிய பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன், ஒன்றிய துணைத்தலைவர்கள் எம்.வாசுதேவன், எம்.ஏ.சுரேஷ், ஒன்றிய செயலாளர் டி.கோகுல், ஒன்றிய மகளிர் வி.சத்யா, விஜயா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.