< Back
மாநில செய்திகள்
தமிழகத்தின் மீது பிரதமர் மோடி தனி பாசம் வைத்துள்ளார் - எல். முருகன் பேச்சு
மாநில செய்திகள்

தமிழகத்தின் மீது பிரதமர் மோடி தனி பாசம் வைத்துள்ளார் - எல். முருகன் பேச்சு

தினத்தந்தி
|
8 April 2023 7:31 PM IST

தமிழகத்தின் மீது பிரதமரின் தனிப்பாசத்தால் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது

சென்னை,

சென்னை பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பிரதமர் மோடி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் , மத்திய இணை மந்திரி எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய எல். முருகன் கூறியதாவது ,

தமிழகத்தின் மீது பிரதமரின் தனிப்பாசத்தால் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 9 புதிய ரயில் தடங்களை பிரதமர் தமிழகத்திற்கு கொடுத்திருக்கிறார். மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் செயல்படுத்துகிறார்.

சீரும் சிறப்புமாக தமிழகத்தை வழிநடத்தி வருகிறார் முதல் அமைச்சர் ."இந்தாண்டு மட்டும் 6 ஆயிரம் கோடிக்கு ரயில்வே திட்டங்களை அறிவித்துள்ளார் பிரதமர்" என கூறினார்.

மேலும் செய்திகள்