< Back
மாநில செய்திகள்
தேர்தல் பத்திர மோசடியில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது- செல்வப்பெருந்தகை பேட்டி
மாநில செய்திகள்

தேர்தல் பத்திர மோசடியில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது- செல்வப்பெருந்தகை பேட்டி

தினத்தந்தி
|
15 March 2024 5:13 PM IST

தேர்தல் நிதியை பா.ஜ.க மிரட்டி வாங்கி உள்ளது என செல்வப்பெருந்தகை கூறினார்

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார் .

அப்போது அவர் கூறியதாவது ,

தேர்தல் பத்திர மெகா ஊழலை விஞ்ஞான முறையில் பா.ஜனதாவினர் செய்துள்ளனர். கருப்பு பணத்தை மீட்போம். பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் கருப்பு பணத்தை பா.ஜ.க.தான் உருவாக்கி கொண்டிருக்கிறது. பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து பல கோடி வாங்கப்பட்டுள்ளது. தேர்தல் நிதியை பா.ஜ.க மிரட்டி வாங்கி உள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.இதுபற்றி பேசினால் வருமான வரித் துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் மிரட்டல் விடுக்கப்படுகிறது.இந்த மோசடியில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்