< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தூத்துக்குடி மின்வாகன உற்பத்தி ஆலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
|25 Feb 2024 10:18 AM IST
சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்வாகன உற்பத்தி ஆலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காட் தொழில் பூங்காவில் வியட்நாம் நிறுவனம் வின்பாஸ்ட் ஆலை அமைக்கிறது. முதற்கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ஆலை அமைகிறது.
சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான 50 நாட்களில் ஆலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் தென் தமிழ்நாட்டில் முதல் மின்வாகன தொழிற்சாலை அமைகிறது.