< Back
மாநில செய்திகள்
வெள்ள பாதிப்புகளை தொலைபேசி மூலம் பிரதமர் கேட்டறிந்தார்- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

"வெள்ள பாதிப்புகளை தொலைபேசி மூலம் பிரதமர் கேட்டறிந்தார்"- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
24 Dec 2023 9:09 PM IST

பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதியளித்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரதமர் மோடி, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"தென் தமிழகம், சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி கேட்டறிந்தார். தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய பிரதமரிடம் தமிழகத்தின் வெள்ள பாதிப்புகளை விளக்கினேன்.

மாநில அரசு மேற்கொண்டுள்ள மீட்பு, நிவாரண பணிகள் குறித்து பிரதமரிடம் விளக்கினேன். மழை, வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் வழங்குமாறும் பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதியளித்துள்ளார். வெள்ள பாதிப்பு மதிப்பீடு செய்யும் பணிகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மேற்கொள்வார் என பிரதமர் கூறியுள்ளார்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்