< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பிரதமர் வெறுப்பு அரசியல் செய்யவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்
|28 April 2024 8:50 PM IST
சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டில் பிரதமர் மோடி வெறுப்பு அரசியலை மேற்கொள்ளவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியதாவது;
"சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டில் பிரதமர் மோடி வெறுப்பு அரசியலை மேற்கொள்ளவில்லை. சிறுபான்மை மக்களுக்காக இதுவரை எந்த பிரதமரும் செய்யாத அளவுக்கு திட்டங்களை கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் பாடுபட்டுள்ளார். இதனை பொறுத்துக்கொள்ளாமல் தோல்வி பயத்தில் எது வேண்டுமானாலும் சொல்வார்கள்.
மணிப்பூர் பிரச்சினையில் பல்வேறு உள் விவகாரங்கள் உள்ளது. இவை அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. மணிப்பூர் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகிறது." இவ்வாறு அவர் பேசினார்.