< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
|5 Oct 2023 12:09 AM IST
கருப்பு பட்டை அணிந்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரத்தில் உள்ள மாதிரி பள்ளி முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் எழில் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் அருள்ஜோதி, வட்டார செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அரியலூரில் நடத்தியதாக தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது அனைவரும் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். கோரிக்கைகள் குறித்து கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.