< Back
மாநில செய்திகள்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
20 Sept 2022 11:56 PM IST

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பெலிக்ஸ் முன்னிலை வகித்தார். இதில் மாநில துணை தலைவர் ராஜரத்தினம், மாவட்ட செயலாளர் துரைராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜான்பீட்டர், நிர்மலா உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கற்றல்-கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதால் இணையதளத்தில் புள்ளி விவரங்களை ஆசிரியர்கள் பதிவேற்றுவதை நிறுத்த வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும். அதேபோல் 3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்துவிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்