ராணிப்பேட்டை
ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
|சோளிங்கரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சோளிங்கர்
சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் துளசிராமன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் மனோ குமார், வட்டாரத் துணை செயலாளர் இளங்கோ, மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்.டி.எப்.ஐ. பொதுக்குழு உறுப்பினர் சரவணன் கலந்துகொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 3 சதவீத அகவிலைப்படி உயர்வை போல தமிழக அரசு வழங்க வேண்டும்.
தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும், பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முடிவில் மாவட்ட பொதுக் குழு உறுப்பினர் குமார் நன்றி கூறினார்.