< Back
மாநில செய்திகள்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
6 Oct 2023 12:34 AM IST

கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜேக் மாநில அமைப்பு சார்பில் வருகிற 13-ந் தேதி சென்னையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்தும், தற்போது சென்னையில் நடைபெறும் சம வேலை சம ஊதிய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பின் இடைவேளையின் போது டிட்டோ ஜேக் மாநில அமைப்பு செயலாளர் வேல்மணி, ஆசிரியர் மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பயிற்சிக்கு வந்த 50-க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் ஆண்டிமடம் அரசு பள்ளியில் சுந்தர மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்