< Back
மாநில செய்திகள்
தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் போராட்டம்
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
10 Sept 2024 12:10 PM IST

தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) இன்று (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் போராட்டத்தால், பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை. 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் குறைந்த அளவிலான ஆசிரியர்களே பணிக்கு வந்துள்ளனர்.

பள்ளிகள் ஆசிரியர்கள் இன்றி இயங்காமல் இருக்கக்கூடாது என்றும் அனைத்து அரசுப்பள்ளிகளும் அறிவுரைகளை பின்பற்றி இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்