அர்ச்சகர்களை கருவறையில் அனுமதிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
|அர்ச்சகர்களை கருவறையில் அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் மூலம் கோவில்களில் அர்ச்சகர்களான பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அவமரியாதை செய்யப்படுகின்றனர். கருவறையில் அனுமதிக்க பரம்பரை அர்ச்சகர்கள் மறுப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.
அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட 24 பேரில் 10 பேர் அர்ச்சனைக்கு பதிலாக கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் நியமிக்கப்பட்டோரை கருவறைக்குள் அனுமதிக்க வேண்டும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் பல சிக்கல்கள், ஐயங்கள் உள்ளன; அதனை மத்திய அரசு போக்க வேண்டும் வேட்பாளருக்கு பதிலாக கட்சிக்கு வாக்களிக்கும் முறை கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.