< Back
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்: போக்சோவில் வழக்குப்பதிவு
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்: போக்சோவில் வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
18 March 2024 6:51 AM IST

சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை முத்துக்கடையை சேர்ந்த 14 வயது சிறுமி ஆற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறை நாட்களில் தனது வீட்டிற்கு அருகே உள்ள தேவாலயத்திற்கு சென்று வருவது வழக்கம்.

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேவாலயத்திற்கு சென்ற போது பாதிரியார் ரகுராஜ்குமார் (வயது 54) என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் நீண்ட நாட்களாக சிறுமி மனஉளைச்சலில் இருந்து வந்த நிலையில், பெற்றோர்கள் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரகுராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்