கன்னியாகுமரி
கருங்கல் அருகே மின்சாரம் தாக்கி பூசாரி பலி
|கருங்கல் அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி பூசாரி பலியானார்.
கருங்கல்:
கருங்கல் அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி பூசாரி பலியானார்.
பூசாரியை மின்சாரம் தாக்கியது
கருங்கல் அருகே உள்ள கப்பியறை மானான்விளையை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 59), எட்டணி வட்டவிளை பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவர் நேற்று மதியம் தனது வீட்டில் இரும்பு கம்பிகளை பயன்படுத்தி கோழிக்கூடு ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். இதற்காக மின்சார எந்திரங்களை பயன்படுத்தி வேலை செய்து கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் எந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு கருணாகரனை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
பரிதாப சாவு
இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கருணாகரனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பூசாரிக்கு சிந்து (47) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகள், மகன் இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
வீட்டில் கோழிக்கூட்டை உருவாக்கிய போது மின்சாரம் தாக்கி பூசாரி பலியான சம்பவம் அந்த பகுதியில் ேசாகத்தை ஏற்படுத்தியது.