கோயம்புத்தூர்
பாதிரியார் தற்கொலை
|கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் உள்ள அறையில் பாதிரியார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செட்டிபாளையம்
கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் உள்ள அறையில் பாதிரியார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பாதிரியார்
கோவை ரத்தினபுரி நேரு தெருவை சேர்ந்தவர் ஜோசப் சகாய ராஜ் (வயது 57). இவர் கோவை அருகே ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள புனித குழந்தை தெரசா ஆலயத்தில் தங்கி கடந்த 2 ஆண்டாக பாதிரியாராக இருந்து வந்தார்.
அவர், நேற்று முன்தினம் மதியத்தில் இருந்து தனது அறையை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த ஆலய ஊழியர்கள் பாதிரியார் தங்கி இருந்த அறையின் கதவை தட்டினார்கள். ஆனால் கதவு திறக்கப்பட வில்லை.
தற்கொலை
இது குறித்து பாதிரியாரின் அண்ணன் ஆரோக்கியராஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து அக்கம் பக்கத் தினர் உதவியுடன் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மின்விசிறியில் பாதிரியார் ஜோசப் சகாயராஜ் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார்.
உடனே அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பாதிரியார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
காரணம் என்ன?
இது குறித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்த பாதிரியார் ஜோசப் சகாயராஜ் கடந்த 15 ஆண்டுகளாக மனநிலை பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் அவர் தனது அண்ணன் ஆரோக்கியராஜின் மகள் திருமணத்துக்காக பல இடங்களுக்கு சென்று வந்ததால் சரியாக மருந்து-மாத்திரை சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.