< Back
மாநில செய்திகள்
கோவில் உண்டியலில் பணம் திருடிய பூசாரி கைது
கரூர்
மாநில செய்திகள்

கோவில் உண்டியலில் பணம் திருடிய பூசாரி கைது

தினத்தந்தி
|
23 Sept 2023 11:40 PM IST

கோவில் உண்டியலில் பணம் திருடிய பூசாரி கைது செய்யப்பட்டார்.

கரூர் நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 50). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு மாரியம்மன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோவில் உண்டியலில் இருந்து இளங்கோவன் ரூ.150-ஐ திருடியதாக கூறப்படுகிறது.

இதைக்கண்ட மடவளாகத்தை சேர்ந்த ஆனந்த் என்பவர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, இளங்கோவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்