< Back
மாநில செய்திகள்
வரத்து குறைந்ததால் தொடர்ந்து விலை ஏறுமுகம்:மதுரை வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.180-க்கு விற்பனை
மதுரை
மாநில செய்திகள்

வரத்து குறைந்ததால் தொடர்ந்து விலை ஏறுமுகம்:மதுரை வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.180-க்கு விற்பனை

தினத்தந்தி
|
2 Aug 2023 2:34 AM IST

வரத்து குறைந்ததால் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது. மதுரை வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது.


வரத்து குறைந்ததால் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது. மதுரை வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி வரத்து குறைவு

சமீப காலமாக காய்கறிகளில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.100-க்கு விற்ற தக்காளி படிப்படியாக உயர்ந்து தற்போது பல்வேறு இடங்களில் கிலோ ரூ.200-க்கு விற்கிறது.

தக்காளி விலை உயர்வுக்கு காரணம் அதன் விளைச்சல் உள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது தான். இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் ரேஷன்கடை வாயிலாக தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும், மதுரையை சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்தும் தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

ரூ.180-க்கு விற்பனை

தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் சமையலில் தக்காளி அளவை வெகுவாக குறைத்து விட்டனர். ஓட்டல்களில் தக்காளி சட்னி வைப்பது பெரும்பாலானோர் குறைத்து விட்டனர்.

இந்த நிலையில் நேற்று மதுரை எல்லீஸ் நகர் வாரச்சந்தையில் தக்காளி அளவில் சிறியது கிலோ 120 ரூபாய்க்கும், அளவில் பெரியது 180 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அதையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கினார்கள். தொடர்ந்து தக்காளி விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்