< Back
மாநில செய்திகள்
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிவு
மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிவு

தினத்தந்தி
|
24 July 2022 11:09 AM IST

வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிந்துள்ளது.

சென்னை,

சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதில் தக்காளி விளைச்சல் தற்போது அதிகரித்துள்ளதால், அதன் வரத்தும் அதிகரித்து இருக்கிறது.

இந்நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று வெங்காயம், தக்காளி, உருளைக் கிழங்கு, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சரிந்துள்ளது.

அதன்படி, வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கும், நவீன் தக்காளி கிலோ 15 ரூபாக்கும், நாட்டுத் தக்காளி கிலோ ரூ. 10க்கும் விற்பனையாகிறது. அதேபோல் உருளைக்கிழங்கு கிலோ 40 ரூபாய் முதல் ரூ. 27 வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பின்ஸ் கிலோ ரூ60 - ரூ.50 வரையிலும், கேரட் கிலோ ரூ 45 முதல் ரூ.30 வரையிலும், முள்ளங்கி 12 ரூபாய் முதல் ரூ.10 வரையிலும், முட்டை கோஸ் 15 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 28 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 15 ரூபாய்க்கும், அவரைக்காய் 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ரூ. 40க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்