< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகள் விலை குறைந்தது
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

புதுக்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகள் விலை குறைந்தது

தினத்தந்தி
|
16 March 2023 12:02 AM IST

புதுக்கோட்டை உழவர் சந்தையில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை குறைந்து வருகிறது. தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

காய்கறிகள் வரத்து அதிகரிப்பு

புதுக்கோட்டை சந்தைபேட்டை உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் வருகை தருவது உண்டு. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காய்கறிகளின் வரத்து குறைவால் ஒரு சில காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. கத்தரிக்காய் கிலோ ரூ.100-க்கும், முருங்கைக்காய் ரூ.120-க்கும் விற்றது. இதேபோல் தக்காளி, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது காய்கறிகள் வரத்து அதிகரித்து உள்ளதால் அவற்றின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி கத்தரிக்காய் கிலோ ரூ.60-க்கு விற்பனையாகிறது. இதேபோல் ரூ.30-க்கு விற்ற தக்காளி கிலோ ரூ.20-க்கும், ரூ.100-க்கு விற்ற மாங்காய் ரூ.60-க்கும், முருங்கைக்காய் ரூ.70-க்கும் விற்பனையாகிறது. மேலும் காய்கறிகள் விலை தொடர்ந்து வீழ்ச்சியடையும் என உழவர் சந்தை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

வெண்டைக்காய் கிலோ ரூ.60-க்கு விற்பனை

புதுக்கோட்டை உழவர் சந்தையில் விற்பனையான காய்கறிகள் விலை (கிலோவில்) வருமாறு:- வெண்டைக்காய் ரூ.60-க்கும், புடலங்காய் ரூ.25-க்கும், பாகற்காய் ரூ.40-க்கும், அவரைக்காய் ரூ.70-க்கும், கொத்தவரங்காய் ரூ.40-க்கும், பச்சைமிளகாய் ரூ.35-க்கும், முள்ளங்கி ரூ.10-க்கும், கேரட் ரூ.40-க்கும், பீட்ரூட் ரூ.30-க்கும், முட்டைகோஸ் ரூ.16-க்கும், சேனைக்கிழங்கு ரூ.50-க்கும், கருணைக்கிழங்கு ரூ.30-க்கும், சர்க்கரைவள்ளி கிழங்கு ரூ.40-க்கும், சின்னவெங்காயம் ரூ.48-க்கும், பெரிய வெங்காயம் ரூ.25-க்கும் விற்பனையானது.

மேலும் செய்திகள்