< Back
மாநில செய்திகள்
வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது:மதுரை மல்லிகை கிலோ ரூ.400-க்கு விற்பனை
மதுரை
மாநில செய்திகள்

வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது:மதுரை மல்லிகை கிலோ ரூ.400-க்கு விற்பனை

தினத்தந்தி
|
27 April 2023 1:42 AM IST

மதுரை மல்லிகை வரத்து அதிகரிப்பால் தற்ேபாது விலை கணிசமாக குறைந்திருக்கிறது.


மதுரை மல்லிகை வரத்து அதிகரிப்பால் தற்ேபாது விலை கணிசமாக குறைந்திருக்கிறது.

மதுரை மல்லிகை

மதுரை மல்லிகைப்பூவுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. திருவிழா, முகூர்த்த தினங்களில் அதனுடைய விலை உச்சத்தை தொடும். மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து தினமும் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு டன் கணக்கில் மல்லிகை உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்காக வருகின்றன.

வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. செண்ட் ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

வரத்து அதிகரிப்பு

தற்போது வெயில் காலம் என்பதால் மல்லிகைப்பூவின் வரத்து அதிகமாக இருக்கிறது. நேற்று மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை ரூ.400-க்கு விற்பனையானது. மற்ற பூக்களான பிச்சி ரூ.300, முல்லை ரூ.250, சம்பங்கி ரூ.50, செண்டுமல்லி ரூ.700, பட்டன்ரோஸ் ரூ.50 என விற்பனையானது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், சித்திரை திருவிழாவின் போது மல்லிகை பூக்களின் விலை குறையும். ஏனென்றால் சித்திரையில் பூக்களின் விளைச்சல் அதிகமாக இருக்கும். ஆனால், கடந்த ஆண்டைவிட அதிக விளைச்சல் இருப்பதால் பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.6 ஆயிரம் வரை விற்பனையானது. வரும் நாட்களிலும் இதே விலைதான் நீடிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்