< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
|10 Sept 2022 10:33 PM IST
மங்கலம்பேட்டை பகுதியில் சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
விருத்தாசலம்,
மங்கலம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், 25 வயது வாலிபருக்கும் திங்கட்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இதுபற்றி அறிந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சித்ரா உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் முகுந்தன், விருத்தாசலம் வட்ட ஊர் நல விரிவாக்க அலுவலர் பாரதி மற்றும் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் ஆகியோர் அங்கு சென்று சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்தி, அவர்களது பெற்றோர்களை எச்சரிக்கை செய்தனர். பின்னர், அந்த சிறுமியை மீட்டு கடலூர் குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்தனர்.