< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் பத்திரிகையாளர் நல வாரிய கூட்டம்
|31 March 2023 4:12 PM IST
பத்திரிகையாளர் ஓய்வூதியம், குடும்ப உதவி நிதி கோரிய விண்ணப்பங்கள் குறித்து பத்திரிகையாளர் நல வாரிய கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன.
சென்னை,
தமிழ்நாடு அரசின் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பத்திரிகையாளர் நல வாரியத்தின் 4-வது கூட்டம் நடைபெற்றது. இதில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன், பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினரான தினத்தந்தி குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பத்திரிகையாளர் ஓய்வூதியம், குடும்ப உதவி நிதி கோரிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. முன்னதாக பணிக்காலத்தில் மரணமடைந்த பத்திரிகையாளர் ஒருவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.