< Back
மாநில செய்திகள்
ஜனாதிபதி தேர்தல்: தமிழக சட்டசபை வளாகத்தில் வாக்குச்சாவடி பணிகள் தொடக்கம்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: தமிழக சட்டசபை வளாகத்தில் வாக்குச்சாவடி பணிகள் தொடக்கம்

தினத்தந்தி
|
17 July 2022 3:22 AM GMT

ஜனாதிபதி தேர்தலுக்காக தமிழக சட்டசபை வளாகத்தில் வாக்குச்சாவடி பணிகள் தொடங்கி உள்ளது.

சென்னை,

தமிழகத்தின் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு, சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை வளாகத்தில் உள்ள குழு கூட்ட அறையில் நடைபெறுகிறது. இந்த அறையில் மிகப்பெரிய மேஜை போடப்பட்டு இருக்கும். இந்த தேர்தலுக்காக அதை அப்புறப்படுத்தி உள்ளனர்.

மேலும், ஓட்டுப் பெட்டியை வைப்பதற்காக அங்கு மேஜை ஒன்று போடப்பட்டுள்ளது. அதில் மறைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஓட்டு போடும் மேஜையை அடைவதற்கு முன்பு 3 அலுவலர்கள் அமர்ந்திருப்பதற்கான நாற்காலி மற்றும் மேஜைகள் சற்று தூரத்தில் போடப்பட்டுள்ளன. ஓட்டு போட வருவோரின் அடையாள அட்டையை ஒரு அலுவலர், பெயர் பட்டியலுடன் சரிபார்த்து டிக் செய்வார்.

பின்னர் வாக்குச்சீட்டை மற்றொரு அலுவலர் வழங்குவார். இந்தத் தேர்தலை நடத்துவதற்காக உதவித் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் அங்கு அமர்ந்திருப்பார். அந்த வகையில் வாக்குச்சாவடியை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த ஏற்பாடுகளை அனைத்தையும் தேர்தல் பார்வையாளராக வந்திருக்கும் புவனேஷ்வர்குமார் பார்வையிடுவார். வாக்குப்பதிவு தொடர்பாக கி.சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கின்றனர். இந்தியாவின் மற்ற பல மாநிலங்களிலும் இதுபோன்று வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்