< Back
மாநில செய்திகள்
ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் தமிழகம் வருகை
மாநில செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் தமிழகம் வருகை

தினத்தந்தி
|
20 July 2023 10:44 AM GMT

ஜனாதிபதி அடுத்த மாதம் தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை,

ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அடுத்த மாதம் 6-ந்தேதி அவர் தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்றைய தினம் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வார். தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்