< Back
மாநில செய்திகள்
ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மாநில செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தினத்தந்தி
|
20 Jun 2024 1:51 PM IST

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னை,

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நமது ஜனாதிபதி நல்ல உடல்நலனோடும், மகிழ்ச்சியோடும், மனநிறைவளிக்கும் பெருவாழ்வினை வாழ விழைகிறேன்." என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்