< Back
மாநில செய்திகள்
சிவராத்திரி விழாவில் பங்கேற்க ஈஷா யோகா மையம் வந்தடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு...!
மாநில செய்திகள்

சிவராத்திரி விழாவில் பங்கேற்க ஈஷா யோகா மையம் வந்தடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு...!

தினத்தந்தி
|
18 Feb 2023 7:01 PM IST

சிவராத்திரி விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஈஷா யோகா மையம் வந்தடைந்தார்.

கோவை,

ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் திரவுபதி முர்மு முதல் முறையாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்தார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு 2 நாள் பயணமாக மதுரைக்கு வந்த ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதன்பின், நண்பகலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் தக்கார் கருமுத்து கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். சிவராத்திரியான இன்று மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் அவர் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். மகா சிவராத்திரிய முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக அவர் கோவை வந்துள்ளார். ஈஷா மையத்தை வந்தடைந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கு தீர்த்த குளத்தை பார்வையிட்ட பின் அவர் தியான பீடத்தில் வழிபாடு செய்தார்.

மேலும் செய்திகள்