< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாளை சென்னை வரும் ஜனாதிபதி: பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலியாக பாதுகாப்பு அதிகரிப்பு
|25 Oct 2023 7:32 PM IST
கவர்னர் மாளிகையில் தங்கி பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
நாளை மறுநாள் நடைபெறும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார். இதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை சென்னை வருகிறார்.
இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக பழைய விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சென்னை வருகையில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்து உள்ளது. மேலும் கவர்னர் மாளிகையில் தங்கி பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என்றும் டிஜிபி அலுவலகம் தெரிவித்து உள்ளது.