< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு முதலுதவி செயல்முறை விளக்க நிகழ்ச்சி
|8 Dec 2022 12:15 AM IST
ஒரத்தூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு முதலுதவி செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடந்தது.
நாகை அருகே ஒரத்தூர் சிதம்பரனார் அரசு நடுநிலைப்பள்ளியில் மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தற்காப்பு முறைகள் மற்றும் முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சிவா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை சுகாதார ஆய்வாளர் சக்திதேவன் தொடங்கி வைத்தார். இதில் வீட்டில் மின்சாதனங்களை பாதுகாப்பான முறையில் கையாள்வது, காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து, தீயணைப்பான் கருவியை இயக்குவது ஆகியவை குறித்து மாணவர்களுக்கு பயிற்சியாளர்கள் பிரகாஷ், மணிமாறன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தில், அலமேலு ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் பாலசண்முகம் நன்றி கூறினார்.