பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி
|தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை,
நேற்று முன்தினம் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்தற்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக கழகப் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடி K.பழனிச்சாமி, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம், மதிப்புக்குரிய சசிகலாவு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், பாட்டாளி மக்கள் கட்சியின் G.K.மணி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் மற்றும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் எனக்கு தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரிலும் வாழ்த்துக்களை தெரிவித்த கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.