< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம்
|14 Dec 2023 12:29 PM IST
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜயகாந்திற்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை,
சென்னை திருவேற்காட்டில் தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார். அவரைப் பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜயகாந்திற்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்தை ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரேமலதா தேர்வு செய்யப்பட்டது குறித்து அறிவிக்கப்பட்டதும் தேமுதிக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும், தேமுதிக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதும் பிரேமலதா, விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றார். பின்னர் பொதுச்செயலாளராக பிரேமலதா உரையாற்றினார்.