< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
மரம் விழுந்ததில் படுகாயம் அடைந்த கர்ப்பிணி பெண் போலீசின் கணவர் பலி
|20 Jun 2023 3:05 PM IST
சென்னையில் மரம் விழுந்ததில் படுகாயம் அடைந்த கர்ப்பிணி பெண் போலீசின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை கொண்டிதோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 33). இவருடைய மனைவி போலீஸ் ஆவார். தற்போது இவர் கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 12-ந் தேதி கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் எழும்பூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையோரம் இருந்த ஒரு பெரிய மரம் திடீரென முறிந்து அவர்கள் மீது விழுந்தது.
இதில் பெண் போலீஸ் காயம் அடைந்தார். அவருடைய கணவர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஆனந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எழும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.