செங்கல்பட்டு
கூடுவாஞ்சேரி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
|கூடுவாஞ்சேரி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். இவரது மனைவி கோடீஸ்வரி (வயது 21), இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் 9 மாத கர்ப்பிணியான கோடீஸ்வரி நேற்று முன்தினம் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் கோடீஸ்வரியை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினை காரணமாக கோடீஸ்வரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் கணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.