< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
கர்ப்பிணி தற்கொலை
|20 July 2022 10:32 PM IST
நிலக்கோட்டை அருகே, தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.
நிலக்கோட்டை அருகே உள்ள ஆச்சிபுரத்தை சேர்ந்தவர் அழகுமுருகன். இவர், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி ராஜலட்சுமி (வயது 32). இந்த தம்பதிக்கு, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் மீண்டும் ராஜலட்சுமி கர்ப்பமானார்.
இதற்கிடையே கடந்த சில வாரங்களாக அவர் அடிக்கடி வயிற்று வலி மற்றும் உடல்நிலை பாதிப்பால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.