< Back
மாநில செய்திகள்
கொரோனா காலத்தில் பணியாற்றிய ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கொரோனா காலத்தில் பணியாற்றிய ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

தினத்தந்தி
|
22 April 2023 12:15 AM IST

சுகாதார துறையில் காலியிடங்கள் நிரப்புவதாக அறிவிப்பு: கொரோனா காலத்தில் பணியாற்றிய ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்


தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்க மாநில தலைவர் நாகை செல்வன், முதல்-அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

சட்டப்பேரவையில், மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொது சுகாதாரத்துறையில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை, தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் வரவேற்பதுடன், நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் இப்பணியிடங்களை நிரப்பும்போது, கொரோனா காலக்கட்டங்களில் தன் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றிய தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள், மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றி வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு இப்பணியை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்