< Back
மாநில செய்திகள்
டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தினத்தந்தி
|
9 Sept 2023 7:11 PM IST

வந்தவாசியில் டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வந்தவாசி

வந்தவாசியில் நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வந்தவாசி நகராட்சி மற்றும் வழுவூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது இளநீர் கடை, பேக்கரிகள், பழைய டயர் கடைகள் போன்ற இடங்களை ஆய்வு செய்தனர்.

ஆரணி ரோட்டில் உள்ள கடையில் பழைய டயர்களை பறிமுதல் செய்தனர். மேலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

ஆய்வின்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம், வட்டார சுகாதார மேற்பார்வை இளங்கோவன், வழுவூர் வட்டார சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ்பாபு, சுமதி, மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்