< Back
மாநில செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் சாமியார் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் சாமியார் கைது

தினத்தந்தி
|
20 Jun 2022 3:21 PM IST

ஊத்துக்கோட்டை அருகே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் சாமியார் கைது செய்யப்பட்டார்.

தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் ஆசிரமம் நடத்தி வருபவர் முனுசாமி (வயது 50). இவரது ஆசிரமத்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவி சென்றார். அவருக்கு நாகதோஷம் உள்ளதாக முனுசாமி கூறியதையடுத்து அவருடைய பெற்றோர் கல்லூரி மாணவியை ஆசிரமத்தில் தங்க வைத்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி ஆசிரமத்தில் தங்கி இருந்த கல்லூரி மாணவி திடீரென்று மயங்கி விழுந்தார். அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக சாமியார் அனைவரையும் நம்பவைத்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி 16-ந்தேதி இறந்துவிட்டார்.

கைது

இது குறித்து பென்னாாலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியதில் முனுசாமி திட்டம்போட்டு மாணவியை பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று சாமியார் முனுசாமியை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்