< Back
மாநில செய்திகள்
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
தென்காசி
மாநில செய்திகள்

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
14 Aug 2023 12:15 AM IST

கடையத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.

கடையம்:

கடையம் அருகே உள்ள வெய்க்காலிபட்டி புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஜாக்கோ வர்கிஸ் தலைமை தாங்கினார். கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன்ஷிலா பரமசிவன் முகாமை தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் ஹென்றி ராஜ்குமார் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் முகமது முபாரக், பாண்டியராஜன், சங்கரி, ரம்யா, ரத்னாதேவி, ஆஷா பர்வீன் ஆகியோர் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் பழனி குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்