தேனி
மழை வேண்டி அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு
|தேவதானப்பட்டி பகுதியில் மழை வேண்டி அய்யனார் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் அய்யனார் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மழை வேண்டி திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அய்யனார் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து குதிரை வாகனத்தில் அய்யனார் ஊர்வலமாக வந்தார். ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் சிறுகுளம் கண்மாய் அருகே உள்ள கோவிலில் சிலை வைக்கப்பட்டது.
இதேபோல் கெங்குவார்பட்டியில் பொன்மலை அய்யனார் சுவாமி கோவிலில் கும்பிடு விழா நடைபெற்றது. இதையொட்டி அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக அய்யனார் வீதி உலா வந்தார். இதையடுத்து மட்ட மலையில் உள்ள கோவில் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.