< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
அக்னீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு
|5 March 2023 1:14 AM IST
அக்னீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நேற்று மாலை நடந்தது. அப்போது நந்தியெம்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மலர்களால் நந்தியெம்பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல கோவில் பத்து ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.