< Back
மாநில செய்திகள்
தேசிய சின்னத்தை மாற்றியதாக பிரகாஷ்ராஜ் எதிர்ப்பு
மாநில செய்திகள்

தேசிய சின்னத்தை மாற்றியதாக பிரகாஷ்ராஜ் எதிர்ப்பு

தினத்தந்தி
|
16 July 2022 8:59 AM IST

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ், தொடர்ந்து சமூக, அரசியல் கருத்துகளை பகிர்ந்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பா.ஜ.க. ஆட்சியை விமர்சித்தும் சர்ச்சை கருத்துகளை பதிவிடுகிறார். சில தினங்களுக்கு முன்பு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பரப்பில் தேசிய சின்னத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதில் நான்முக சிங்கங்கள் உறுமியபடி தோற்றம் அளித்தன. தேசிய சின்னம் மாற்றியமைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டித்தன. இந்த நிலையில் நடிகர் பிரகாஜ்ராஜும் புதிய தேசிய சின்னம் குறித்து படங்கள் மூலமாக விமர்சித்து உள்ளார்.

சாந்தமாக இருக்கும் ராமர், அனுமார் படங்களையும் புதிய தோற்ற புகைப்படங்களையும் வழக்கமான நான்முக சிங்கங்களின் தேசிய சின்னம் புகைப்படத்துடன் மோடி திறந்து வைத்துள்ள உறுமிக்கொண்டு இருக்கும் சிங்கம் படத்தையும் வெளியிட்டு நாடு எங்கே செல்கிறது என்று பதிவையும் பகிர்ந்து பா.ஜ.க.வை விமர்சனம் செய்துள்ளார். இது பரபரப்பாகி உள்ளது.

மேலும் செய்திகள்