< Back
மாநில செய்திகள்
பிரமிக்கவைக்கும் ஆட்டத்தால் இந்தியர்களின் இதயங்களை வென்று பிரக்ஞானந்தா நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் - கவர்னர் ஆர்.என்.ரவி
மாநில செய்திகள்

பிரமிக்கவைக்கும் ஆட்டத்தால் இந்தியர்களின் இதயங்களை வென்று பிரக்ஞானந்தா நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் - கவர்னர் ஆர்.என்.ரவி

தினத்தந்தி
|
24 Aug 2023 10:36 PM IST

பிரக்ஞானந்தா உங்களின் பிரமிக்கவைக்கும் ஆட்டங்களால், ஒவ்வோர் இந்தியரின் இதயத்தையும் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை,

'பிடே' உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர்.

இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. அதே போல் 2-வது சுற்று ஒன்றரை மணி நேரத்தில் 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெற்ற டை-பிரேக்கர் ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சென் வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இந்த நிலையில் 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பிரக்ஞானந்தா உங்களின் பிரமிக்கவைக்கும் புத்திகூர்மை மிக்க ஆட்டங்களால், ஒவ்வோர் இந்தியரின் இதயத்தையும் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நீங்கள் மறுமலர்ச்சி தன்னம்பிக்கை இந்தியாவின் பிரதிபலிப்பு. இந்த தேசம் உங்களை மிகவும் நேசிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்